மழை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று (டிச. 3) வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை, வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (டிச. 4) மேலும் வலுவிழந்தது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் செங்கல்பட்டு கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள், காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

There is a chance of rain in 20 districts for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகுவிமர்சையாக நடைபெற்ற நவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்!

விஜய்யைப் பார்த்ததும் ஆர்ப்பரித்த தொண்டர்கள்! காதை மூடி சிரித்த விஜய்! | TVK

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகள் திறப்பு

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

நின்றுகொண்டிருந்த பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து! 3 பேர் பலி!

SCROLL FOR NEXT