சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று காலை லேசான வெய்யில் எட்டிப் பார்த்த நிலையில் திடீரென பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் வடபழனி, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை அம்பத்தூர், திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "7 நாள்களுக்குப் பிறகு சென்னையில் சூரியன் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை நம்பி எல்லாம் இன்று துணிகளை காயவைக்காதீர்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திடீர் (குறைந்த நேர) மழைகள் பெய்யலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.