நயினார் நாகேந்திரன் - முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்.
தமிழ்நாடு

அரசின் நடவடிக்கையை இஸ்லாமியரே விரும்பவில்லை! அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன், இபிஎஸ் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக அரசு நாடகமாடுவதாக எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் குற்றச்சாட்டு

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக அரசு நாடகமாடுவதாக எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் விவகாரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில் ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த 2 நாள்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்மதமும் சம்மதம் - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த மு.க. ஸ்டாலின் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ``திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதில் திமுக அரசின் நடவடிக்கையை இஸ்லாமியர்களே விரும்பவில்லை. எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களே திமுஅக அரசின் நடவடிக்கையை விரும்பவில்லை’’ என்று கூறினார்.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல: தமிழக அரசு விளக்கம்

Tiruparankundram Issue! Muslims don't like the Govt's actions: BJP Leader Nainar Nagenthiran, ADMK Leader Edappadi Palaniswami criticizes the DMK government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 4.12.25

இஸ்ரேல் உங்களைப் பாதுகாக்காது.. காஸாவில் ஹமாஸ் எதிரிப் படையின் தலைவர் கொலை!

சூரிய ஒளியைப் பிடித்து... ஷில்பா ஷெட்டி!

மரகதப் புறா... சாக்‌ஷி மாலிக்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 40-வது சதம் விளாசிய ஜோ ரூட்!

SCROLL FOR NEXT