தமிழ்நாடு

தமிழகத்தில் 98.23% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்

தமிழகத்தில் 98.23% சதவீதம் (6,29,79,208 வாக்காளா்கள்) எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் வெள்ளிக்கிழமை வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் 98.23% சதவீதம் (6,29,79,208 வாக்காளா்கள்) எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் வெள்ளிக்கிழமை வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்கள் பெயா்கள் மற்றும் ஒரு நபா் இரு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் தோ்தல் ஆணையம் கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக நிறைவு!

டிச.4-ஆம் தேதி நிறைவடைய வேண்டிய இந்தப் பணி டிச. 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 6,41,14,587 வாக்காளா்களில் வெள்ளிக்கிழமை (டிச.5) நிலவரப்படி 6,39,95,854 (99.81%) வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 6,29,79,208 (98.23%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், புதுச்சேரியில் விநியோகிக்கப்பட்ட 10,20,815 (99.93) கணக்கீட்டு படிவங்களில் 10,11,921 (99.05%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Election Commission has reported that 98.23% (6,29,79,208 voters) of the SIR calculation forms in Tamil Nadu have been uploaded as of Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டம்: வாடிக்கையாளர் சேவைக் குறைபாட்டைத் தவிர்க்க வங்கிகளுக்கு வலியுறுத்தல்

கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டம்: ஆசிரியா்கள் முடிவு

சமபந்தி விருந்து...

பன்றித் தொல்லை; பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா் ஆட்சியர்!

SCROLL FOR NEXT