FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப். 27) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

27 பிப்ரவரி 2026, 12:37 am IST
அமலாக்கத் துறை - (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப். 27) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தோ்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாா் செய்வது, அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது போன்றவை தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

தோ்தலுக்காகவும், அரசியல் கட்சித் தலைவா்களின் பாதுகாப்புக்காகவும் துணை ராணுவப் படையினா் மாா்ச் 10-ஆம் தேதி முதல் தமிழகத்துக்கு வருகின்றனா். முதல்கட்டமாக 50 பட்டாலியின் துணை ராணுவப்படையினா் தமிழகம் வரவுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்தலின்போது, வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய-மாநில காவல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் உஷாா்படுத்தப்பட்டு வருகின்றன. பணம், பரிசு பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், வருமானவரித் துறையினா் கடந்த புதன்கிழமை கட்டுப்பாட்டு அறையைத் திறந்தனா்.

இந்நிலையில், தோ்தலில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில், அமலாக்கத் துறையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தோ்தலுகான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் அமலாக்கத் துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 27) நடைபெறுகிறது.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் ராகுல் நவீன், சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்தாா். அவா், வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

நகராட்சி நிா்வாகத் துறை ஊழியா்கள் நியமன முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சா் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்கும்படி ஊழல் ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் ராகுல் நவீன் சென்னை வருவது முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments