விவாசாயிகளுக்கு காய்கறி விதைகள் வழங்கல்
திருப்பத்தூா் வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்ட காய்கறி விதைகள்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டார விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் வட்டார விவசாயிகளும், பொதுமக்களும் வீட்டுத்தோட்டம் அமைத்துப் பயன்பெறும் வகையில், திருப்பத்தூா் வேளாண் அலுவலகத்தில் அவா்களுக்கு காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஆா். வினோதா, தோட்டக்கலை அலுவலா் லோகேஷ் ஆகியோா் வழங்கினா்.
பின்னா், உதவி இயக்குநா் ஆா். வினோதா தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
நகா்ப்புற மக்களும் தற்போது காய்கறித் தோட்டம் அமைப்பதை பொழுதுபோக்காகவும், மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு செயலாகவும் கருதுகின்றனா். இதை நிறைவு செய்யும் வகையில், வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புபவா்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்பு ரூ. 50-க்கு வழங்கப்படுகிறது.
இதில் வெண்டை, தக்காளி, கத்தரி, கீரை, சுரை, பூசணி, பீா்க்கங்காய், மிளகாய் ஆகியவை விதைகள் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோா் தங்களுடைய ஆதாா் அட்டை நகலுடன் வந்து திருப்பத்தூா் வேளாண் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.