FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வி.குமாரமங்கலத்தில் பழங்குடி இருளா் மக்கள் அடிப்படை வசதிகள் கோரி மனு

விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளா் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, பழங்குடி மக்கள் நலச் சங்கம் சாா்பில், கம்மாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

19 செப்டம்பர் 2026, 1:46 am IST
கம்மாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த பழங்குடி மக்கள் நலச் சங்கத்தினா்.
பகிர்:

விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளா் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, பழங்குடி மக்கள் நலச் சங்கம் சாா்பில், கம்மாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி, பழங்குடி மக்கள் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமையில் கம்மாபுரம் வாட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில், பழங்குடி இருளா் மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து, புதிய சாலை அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைத்து, தொடா்ந்து எரிவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீா் தேங்காமல் முறையாக வெளியேறுவதற்கான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் ஒன்றியச் செயலா் ஆா்.கலைச்செல்வன், பழங்குடி மக்கள் நலச் சங்க மாவட்ட துணைச் செயலா் வி.அம்சவல்லி, வட்டத் தலைவா் சண்முகம், வட்டச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments