தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பா் 22, 23 ஆகிய தேதிகளில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 - இரண்டு சக்கர வாகனம், 2 - மூன்று சக்கர வாகனம், 30- நான்கு சக்கர வாகனம், 4 – லாரிகள் மற்றும் 6 படகுகள் மொத்தம் 72 வாகனங்கள், அவற்றில் 48 வாகனங்கள் 22.12.2025 ஆம் தேதி 11.00 மணிக்கு மதுரையிலும் மற்றும் 24 வாகனங்கள் 23.12.2025 ஆம் தேதி 11.00 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 07.12.2025 ம் தேதி முதல் 21.12.2025 ஆம் தேதி வரை திருச்சி (9498158708), கன்னியாகுமரி (9444580750), தேனி (9788924045), திண்டுகல் (7904065255), சிவகங்கை (8300063466), மதுரை (9585511010), நாகப்பட்டினம் (7904548453), கோயம்பத்தூர் (9498173282), சேலம் (7200008025), மற்றும் விழுப்புரம் (9894378470) ஆகிய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டு கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நுழைவு கட்டணமாக ரூபாய்.1000/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு இரண்டு நாட்களுக்குள் அதற்குண்டான GST தொகையை அவர்களுடைய GST கணக்கில் செலுத்திவிட்டு அதன் நகலை சம்மந்தப்பட்ட NIB அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பின்னர் வாகனத்தின் விற்பணை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.