திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிச.8ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்ட ம்” 08-12-2025 திங்கள்கிழமை காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்ச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்ட செயலாளர்கள் ஓரிடத்தில் அமர வைத்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.