கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிச. 19 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.
தமிழக மாணவா்கள் 20 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் முதல்கட்டமாக 2025- 26 ஆம் ஆண்டு 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.
இதற்கான டெண்டர் கோரப்பட்டு மடிக்கணினி கொள்முதலுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து திமுக ஆட்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிச. 19 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற டிச. 19 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | விமான சேவை பாதிப்பு: 7 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு! மேலும் 2 சிறப்பு ரயில்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.