ஈரோட்டில் டிச. 16-ல் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தவெக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களுடன் பேசுகையில், ``ஈரோட்டில் தவெக தலைவர் விஜய், வருகிற 16 ஆம் தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். வாரி மகாலுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் இடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதிகோரி, கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், அதற்கான பணிகள் விரைவில் நடைபெறும். சாலைவல நிகழ்ச்சி, தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழகமே ஒரு திருப்புமுனையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிற உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன சொல்கின்றனர் என்பது உங்களுக்கேத் தெரியும். மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள்’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.