சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.  
தமிழ்நாடு

தலைஞாயிறு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் விவசாயிகள் சாலை மறியல்

பயிர்களுக்கு இழப்பீடு கோரி தலைஞாயிறு அருகே அருந்தவம்புலத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கோரி தலைஞாயிறு அருகே அருந்தவம்புலத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள்பட்ட அருந்தவம்புலம், ஆய்மூர், பன்னத்தெரு, மாராச்சேரி, தொழுதூர், புத்தூர், மணக்குடி, நீர்முளை, காடந்தேத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட கனமழையால் பாதிப்புக்குள்ளான சம்பா மற்றும் தாளடிப் பருவ நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை எண்ம முறை அடிப்படையில் எடுப்பதை தவிர்த்து வழக்கம் போல பதிவேடுகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், வடிகள் ஆறுகளை முறையாக தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெறுகிறது.

திமுக அரசு 13 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளது: அன்புமணி ராமதாஸ்

இந்தப் போராட்டத்தால் கிழக்குக் கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் பிரதான வழித்தடத்தில் திங்கள்கிழமை காலை 10:45 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Farmers block road on East Coast Road near Thalainayar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

200 முறை வெளிநடப்பு செய்தாலும்... எதிர்க்கட்சியை விமர்சித்த அமித் ஷா பேச்சு!

அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!

காதலில் விழச்செய்யும்... கனிகா மான்!

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது... தேஜூ அஸ்வினி!

SCROLL FOR NEXT