வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை. படம்: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு

வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை! எங்கெல்லாம் மழை!

வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவலை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன் மழை நிலவரம் குறித்து தெரிவித்திருப்பதாவது:

”தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று(டிச. 8) தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். இன்று விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம்.

பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக அமையும்.

நாளை (டிச. 9) பிற்பகலில் காவிரி டெல்டா கடலோரப் பகுதிகளில் மழை துவங்கி இரவு நேரத்தில் பரவலாக பெய்யும். குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் டிசம்பர் 10,11 ஆம் தேதிகளில் விட்டு விட்டு மழை பதிவாகும்.

ஒருசில இடங்களில் கனமழையும், கடலோரத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழையும் எதிர்ப்பார்க்கப்படுவதால், வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது.

மேலும் வடமாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை மழை வாய்ப்பு இல்லை. அனைத்து விதமான வேளாண் பணிகளையும் திட்டமிடலாம்.

Delta Weatherman Hemachandran has provided information on where rain will fall due to the persistent low pressure area in the Bay of Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் பியூட்டி... அஷ்னூர் கௌர்!

3-வது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஆஸி. வீரர் கொடுத்த அப்டேட்!

களம்காவல் வெற்றிக்கு விடியோ வெளியிட்ட மம்மூட்டி!

திலீப் சிறை செல்ல முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணமா? என்ன சொன்னார்?

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் படம்! தோற்றம் இதுவா?

SCROLL FOR NEXT