கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை திடீர் சந்திப்பு
கோவையில் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை சந்தித்துக்கொண்டது அரசியலில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
கோவையில் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை சந்தித்துக்கொண்டது அரசியலில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் அவரை அழைத்து பேசுவதும், தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசுவதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
50 காசு நாணயம்! பயன்பாட்டிலிருந்து மறைந்தாலும் சட்டப்படி செல்லும்!
இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிர்ந்து உள்ளார்.