கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சென்னையில் 10-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து!

சென்னையில் 10-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை தரும் இண்டிகோ விமானங்கள் 10-வது நாளாக வியாழக்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

24 புறப்பாடு, 12 வருகை என மொத்தம் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானங்கள், தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, கொச்சி, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமானங்கள் என 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் சென்னையில் இருந்து ஒரு இண்டிகோ விமானங்கள்கூட இயக்கப்படாத நிலையில், நேற்று 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஏராளமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது, புதிய விதிமுறைகளில் இருந்து விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விலக்கு அளித்திருக்கும் நிலையில், நிலைமை படிப்படியாக சீராகி வருகின்றது.

Indigo flights: cancelled for the 10th consecutive day in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறை

சங்கரன்கோவிலில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் முகாம்

மவுண்ட் ஹில்டன் பள்ளியில் அணிகள் தின விழா

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28க்கு ஒத்திவைப்பு

தென்காசி அரசு மருத்துவமனையில் தூய்மை இயக்கம்

SCROLL FOR NEXT