அஸ்வினி வைஷ்ணவ் 
தமிழ்நாடு

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி! மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் புது தில்லியில் தொடங்கி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது.

இதற்காக, ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படவிருக்கிறது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப்பிறகு இந்தியாவின் மொத்த மக்கள்தொகை என்ன என்பது தெரிய வரும். 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கப்போகிறது.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாகவும் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

மேலும், அணுசக்தி தொடர்பான மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதுலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு முழு விவரங்கள் வெளியாகவிருக்கின்றன.

Caste enumeration will be included in Census 2027: Union minister Ashwini Vaishnaw.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் பேருந்தில் அதிக கட்டணம்! தனி ஆளாக மறியலில் ஈடுபட்ட நபர்!

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஓர் ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

SCROLL FOR NEXT