புதிய உச்சத்தில் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!!
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,560 உயர்ந்துள்ளது குறித்து...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 12) சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 2,560 உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை இன்று காலை வரலாறு காணாத வகையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000-க்கும் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கம் விலை இரண்டாவது முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.98,960-க்கும், கிராமுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 12,370-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், தொழிற்சாலை பயன்பாட்டில் வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதன்படி, வெள்ளி விலை இன்று இரண்டாவது முறையாக, கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.216-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ.2.16 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்! முதல்முறை அல்ல; 3 வது முறை!