பிரதமர் மோடி கோப்புப் படம்
தமிழ்நாடு

பொங்கல் திருநாளில் பிரதமர் மோடி தமிழகம் வருகை?

பொங்கல் திருநாளில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தருவார் எனத் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் திருநாளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் கொண்டாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஜனவரி 13 முதல் 15 ஆம் தேதிவரையில் 3 நாள்களுக்கு தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழகத்துக்கு வருகைதரும் பிரதமர் மோடி, ஜன. 13-ல் ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயண நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து, ஜன. 14-ல் விவசாயிகளுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் பிரதமர் மோடி, தேர்தல் பணிகள் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, பிரதமர் மோடியின் வருகை குறித்தும் தகவல்கள் கிடைக்கின்றன.

இதையும் படிக்க: விருப்ப மனு பெயரில் பணமோசடி! தேர்தல் ஆணையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் புகார்!

PM Modi Likely To Visit Tamil Nadu For Pongal Ahead Of 2026 Polls: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரிவுடன் தொடங்கி சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!

விரைவில் முடிவடைகிறது ஆனந்த ராகம் தொடர்!

படையப்பா வசூல் இவ்வளவா?

சாலையைக் கடக்கும்போது அதிவேகத்தில் மோதிய கார்: தந்தை கண் முன்னே மருத்துவ மாணவி பலி!

காந்தியின் பெயரை நீக்கிவிட்டு வடமொழி திணிப்பு! - முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு

SCROLL FOR NEXT