தமிழக அரசு 
தமிழ்நாடு

எம்பிபிஎஸ் காலி இடங்களை நிரப்ப என்எம்சியிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப அனுமதிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மீண்டும் வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப அனுமதிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திடம் (என்எம்சி) தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்களும், 1,583 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டைப் பொருத்தவரை 1,736 எம்பிபிஎஸ் இடங்களும், 530 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. இதற்கான நான்கு கட்ட கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்றது.

இதன் முடிவில் 25 எம்பிபிஎஸ் இடங்களும், 27 பிடிஎஸ் இடங்களும் நிரம்பவில்லை. குறிப்பாக, சென்னை மற்றும் சிதம்பரம் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மூன்று பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு என்எம்சியிடம் அனுமதி கோரப்பட்டது. அதில், பிடிஎஸ் இடங்களை மட்டும் நிரப்ப என்எம்சி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எம்பிபிஎஸ் இடங்களின் நிலை குறித்து மாநில மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழுச் செயலா் டாக்டா் லோகநாயகி கூறியதாவது: தற்போது 27 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல் குறிப்பேடு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் என்எம்சியிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, பிற மாநிலங்களும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அந்த இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT