சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள் 
தமிழ்நாடு

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இலுப்பகுடியில் இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தியா-திபெத் பாதுகாப்புப் படைவீரர்கள் பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடை பெற்றது.

இலுப்பகுடியில் இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஆள்சேர்ப்பு பயிற்சி மையம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வீரர்களுக்கு 44 வாரங்கள் 5 டிகிரி முதல் மைனஸ் 40 டிகிரி வரை கடும் குளிர் உள்ளிட்ட பல் வேறு இன்னல்களைச் சமாளிக்கும் வகையிலான பயிற்சி, ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல், மலை ஏறுதல், நீச்சல், யோகா, தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

489-ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 1,244 வீரர்கள் பயிற்சி நிறைவு பெற்றுச் செல்வதையொட்டி, அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சி முடித்து விடைபெறும் விழாவுக்கு இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி ஜஸ்டின் ராபர்ட் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி, மனு மஹாராஜ் பங்கேற்று வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.

பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வீரர்கள் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல் வேறு வீர சாகசங்களையும் நிகழ்த்திக் காட்டினர். தளபதி சந்தீப் தியானி நன்றி கூறினார்.

The training completion ceremony for India-Tibet Border Police personnel was held on Saturday in Iluppakudi near Sivaganga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT