தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தவெகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்தவர் செந்தில்நாதன். மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
இந்த புகாரைத்தொடர்ந்து செந்தில்நாதன் மீது தவெக பொதுச் செயலர் என். ஆனந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். செந்தில்நாதனை கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பபட்டுள்ளார்.
கட்சிப் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக தெரிவித்துள்ளது.
செந்தில்நாதனின் இத்தகைய செயல் தவெக கட்சியினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.