தமிழ்நாடு

மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! கலக்கத்தில் மக்கள்!!

தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று(திங்கள்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 99,840- க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் சவரனுக்கு மேலும் ரூ. 720 உயர்ந்துள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி ஒரு சவரன் தற்போது ரூ.1,00,560- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ. 12,570-க்கு விற்பனையாகிறது.

இன்று ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,360 அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,00,120 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையில் இன்று பிற்பகல் எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 231 - க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,31,000 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold price crosses one lakh again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தைப் பார்த்து சிரிக்கும் ஆஸ்திரேலியர்கள்... புலம்பும் முன்னாள் கேப்டன்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்க தயார்: கூப்பர் கன்னோலி

டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.89.70ஆக நிறைவு!

திருமண பந்தத்தில் இணைந்த பிரபல தொடர் நடிகர்!

2025-ன் ஹாரர் திரைப்படங்கள் ஓர் பார்வை!

SCROLL FOR NEXT