தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விழாவில், க்யூ-ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொண்ட பாதரியார்களுக்கு தவெக தலைவர் விஜய் சால்வை போர்த்தி கெளரவித்தார்.
மேடையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதரியார்கள் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த விழாவில், தவெக நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.