கள்ளக்குறிச்சிக்கு கள ஆய்வு பயணத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச.26) மேற்கொள்கிறாா்.
அங்கு ரூ.139.41 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட ரூ.1,773.67 கோடி மதிப்பிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் திறந்து வைத்து, 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
திருவண்ணாமலையில்...:இதையடுத்து சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செல்கிறாா். திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞா் திடலில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 631 கோடி 48 லட்சத்து 69 ஆயிரம் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை முதல்வா் திறந்து வைத்து, ரூ. 63 கோடி 74 ஆயிரம் மதிப்பிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா் என தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.