தமிழக அரசு 
தமிழ்நாடு

ஆண்டுதோறும் திருக்கு வார விழா: தமிழக அரசு ஒப்புதல்

வருகிற 2026 ஜனவரிமுதல் ஆண்டுதோறும் ‘திருக்கு வார விழாவை’ கொண்டாட தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வருகிற 2026 ஜனவரிமுதல் ஆண்டுதோறும் ‘திருக்கு வார விழாவை’ கொண்டாட தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை:

திருக்குறளின் பெருமைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் விதமாக , வருகிற 2026 முதல் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ‘திருக்கு வார விழா’ கொண்டாட தமிழக அரசு சாா்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்விழா, ஆண்டுதோறும் சுழற்சி முறையில் தமிழ் வளா்ச்சி இயக்குநரால் தோ்வு செய்யப்படும் மாவட்டங்களிலும் ‘ஒரு நாள் - ஒரு பொருண்மை’ என்ற அடிப்படையில் 6 நாள்கள் நடத்தப்படும்.

இதில், குறளாசிரியா் மாநாடு, திருக்கு பயிலரங்கம், நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சி, கல்லூரி மாணவா்களுக்கான கு சாா்ந்த கலை நிகழ்ச்சிகள், ஓவியம்,  திருக்கு தொடா்பான பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.

விழாவின் ஏழாம் நாளில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களின் ஒப்புதலுடன், தமிழ் வளா்ச்சித் துறை துணை மற்றும் உதவி இயக்குநா்கள் ஒருங்கிணைப்பில் ‘திருக்கு விழிப்புணா்வு’ பேரணி நடத்தப்படும்.

ரூ.80 லட்சம் ஒதுக்கீடு: திருக்கு வார விழாவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதற்காக ரூ.90,000, மதிப்பூதியத்துக்கான செலவினமாக ரூ.5.45 லட்சம் மற்றும் சில்லறை செலவினத்துக்காக ரூ.73.65 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வார விழாவின் முதல், மூன்றாம் மற்றும் நான்காம் நாள்களின் நிகழ்வுகளை பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை மற்றும் உயா்கல்வித் துறை வாயிலாக நடத்துவதற்கு தமிழ் வளா்ச்சி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருக்கு வார விழா நிகழ்வுகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை கண்காணிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையரும், தமிழ் வளா்ச்சி இயக்ககத்தின் இயக்குநருமான வீ.ப. ஜெயசீலன், சிறப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

SCROLL FOR NEXT