தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதுதான் அவருக்கு பாதுகாப்பு என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜையில் அஞ்சலி செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களுடன் பேசுகையில், "தமிழகத்தில் ஒரு தூய்மையான அரசியல் வர வேண்டும் என்று விஜயகாந்த் நினைத்தார். பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு கொண்டவராகவும் இருந்தார். 2014-ல் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக மிகக் கடுமையாக உழைத்தார்.
விஜய் எங்களுடன் வருவதுதான் அவருக்கு பாதுகாப்பு என்று நயினார் நாகேந்திரன் கூறியது யதார்த்தமான உண்மைதானே. எதிரணி வாக்குகள் பிரிந்து போகக் கூடாது என்று நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிசாமியும் எதிரணி வாக்குகள் கூட்டாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.