திமுக மகளிர் மாநாட்டுக்காக கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிர் மேற்கு மண்டல அணி சார்பில் நடைபெறும் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு. க. ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
கோவை வந்த முதல்வருக்கு கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர், கோவை மேற்கு மண்டல ஐஜி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி மேற்கு மண்டல திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை, சாலைகளின் இருபுறமும் வழிநெடுக திமுக தொண்டர்கள் நின்று, முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று(டிச. 29) மாலை பல்லடத்தில் நடைபெறும் மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ள நிலையில், முன்னதாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.
பின்பு, பல்லடம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாலை வழியாக செல்ல உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.