தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 29) சவரனுக்கு ரூ. 640 குறைந்து விற்பனை செய்ப்படுகிறது.
வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும் விற்பனையான நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு விலை மேலும் ரூ.100 உயர்ந்து கிராம் ரூ.13,100-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1 லட்சத்து 4,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 29) சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ. 1 லட்சத்து 4,160-க்கும் கிராமுக்கு ரூ. 80 குறைந்து ரூ.13,020-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இன்று சற்றே குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் குறைவு
கடந்த வாரம் முழுவதும் வெள்ளி விலை தினமும் ஆயிரங்களில் உயர்ந்து வந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ. 281-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 4,000 குறைந்து ரூ.2.81 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
In Chennai, the price of gold jewellery is being sold today (December 29) at a decrease of Rs. 640 per sovereign.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.