மேட்டூர் நங்கவள்ளியில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் நங்கவள்ளியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஷ்வரர் திருக்கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது.
இந்த ஆலயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி விழாவில் அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி திரு வீதிஉலா தீபாரதனை நடைபெற்றது. ஸ்ரீ லட்சுமி நரசிமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதிகாலை முதலே சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து “கோவிந்தா.... கோவிந்தா..” என பக்தி முழக்கமிட்டபடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும், மன அமைதி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் நல்லபிரபு, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.எம். ரத்தினம் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.