2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சமூகநீதிக் கொண்டாட்டமாக பொங்கல் பண்டிகையை முன்னெடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பதிவிட்டுள்ளதாவது, தமிழரின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் நன்னாளை, 2026 புத்தாண்டு தொடக்கத்திலிருந்தே சமூகநீதிக் கொண்டாட்டமாக உடன்பிறப்புகள் முன்னெடுக்க வேண்டும்!
அனைத்து வீடுகள் முன்பும், 'சமத்துவம் பொங்கட்டும்!' தமிழ்நாடு வெல்லட்டும்!' என்ற முழக்கங்களுடன் 'திராவிடப் பொங்கல்' கோலமிட்டு சிறுசிறு போட்டிகளை நடத்திப் பரிசளித்திடுக!
மாநிலம் முழுவதும் கட்சி சார்பில் மூன்று கட்டங்களாக ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியாக 3 விளையாட்டுப் போட்டிகளை ஜனவரி 3 முதல் ஜனவரி 9 வரை நடத்திட வேண்டும்.
வெற்றிபெற்ற அணிகளைக் கொண்டு ஜனவரி 10-ஆம் நாள் முதல் பொங்கல் திருநாள் வரை கட்சி மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்திடுக! பிப்ரவரி மாதம் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும்
ஜனவரி 16-17 இரு நாள்களும் தமிழர் பெருமை சொல்லும் கலை - இலக்கிய விழாக்களை நடத்துவதுடன், திரை அமைத்து, திராவிட மாடல் அரசின் பொங்கல் சிறப்புச் செய்தியை அனைவரும் காணும்படி செய்திடுக!
தமிழர்கள் அனைவரும் பங்கேற்றிடும் வகையிலான கலை - இலக்கிய - விளையாட்டுப் போட்டிகளுடன் திராவிடப் பொங்கல் விழாவை ஊர்தோறும் சிறப்பாக நடத்திடுக என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.