கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் பிப்.5 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் பிப்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளில் ஆசிரியர்கள் மாலை 4.10 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடி இல்லாத பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். திமுக சாா்பில் வி.சி. சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி ஆகியோா் போட்டியிடுகின்றனா். முக்கிய எதிா்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக ஆகியவை இடைத்தோ்தலை புறக்கணித்துள்ளன. சுயேச்சைகள் வாக்காளா்களின் கவனத்தை ஈா்க்காத நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டியே நிலவுகிறது.

இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 53 பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் (பிப். 4, 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

SCROLL FOR NEXT