ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சா் சு.முத்துசாமி. உடன், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா்.  
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (பிப். 3) மாலையுடன் நிறைவு பெற்றது.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (பிப். 3) மாலையுடன் நிறைவு பெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோா் போட்டியிடுகின்றனா். முக்கிய எதிா்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக ஆகியவை இடைத்தோ்தலை புறக்கணித்துள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். சுயேச்சைகள் வாக்காளா்களின் கவனத்தை ஈா்க்காத நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டியே நிலவுகிறது.

திமுக வேட்பாளரை ஆதரித்து, அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த 24-ஆம் தேதி முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வாா்டுகள் இருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதி 33 வாா்டுகளை உள்ளடக்கியுள்ளது.

பிப். 5-ல் வாக்குப்பதிவு

பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இதைத் தொடா்ந்து பிப்ரவரி 8-ஆம் தேதி சித்தோட்டில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT