தமிழ்நாடு

வட தமிழகத்தில் நாளையும் அடர் பனிமூட்டம் நிலவும்!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் அடர் பனிக்கு வாய்ப்பு...

DIN

வட தமிழக மாவட்டங்களில் நாளையும் அடர் பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பதுகூட தெரியாத அளவுக்கு பனிப் பொழிவு இருக்கிறது.

சென்னையில் நிலவும் அடர்ந்த பனிமூட்டத்தால், விமானங்கள், ரயில்கள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இன்று பாதிக்கப்பட்டன. தில்லி, மும்பை செல்லும் செல்லும் 5 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. சில விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டன.

அதேபோல், ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதால் ரயில் சேவையிலும் சிறிது தாமதம் ஏற்பட்டது. மேலும், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், வட தமிழகத்தில் அடர்ந்த மூடுபனி இன்று காணப்பட்டது. நாளை காலையிலும் இதே போன்ற காட்சிகள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT