முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதி

வேலூரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

DIN

வேலூரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில், வசித்துவரும் நான்கு மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 06.02.2025 அன்று பிற்பகல் கோயம்புத்தூர் – திருப்பதி விரைவு இயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம்,  சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார், அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று (8.2.2025)  கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ஜன நாயகன் படத்தில் ஷ்ருதி ஹாசன்?

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணிற்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT