தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி, விடுமுறை விடப்படுவதாகவும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.22 ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே நாளை (பிப். 10) அக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.
இதனையொட்டி, தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படாது எனவும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப். 22 ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் எனவும் ஆட்சியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.