புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜனவரி 28 (நாளை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாநகர், திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நாளை (ஜன. 28- புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த நாளுக்கு மாற்றாக வரும் பிப். 7ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், புதன்கிழமை கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கைப் பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் அரசுத் தேர்வுகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.