முகப்பு
ஆர்எஸ் பாரதி
தமிழ்நாடு

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை: ஆர்எஸ் பாரதி

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை என்று திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை: ஆர்எஸ் பாரதி

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை என்று திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Updated On : 9 பிப்ரவரி, 2025 at 9:34 AM
ஆர்எஸ் பாரதி
பகிர்:

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை என்று திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேடடியில்,- தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசு, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து இருக்கிறது. இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, மும்முனைப் போராட்டம் போல திமுக நடத்தியது.

யுஜிசி வரைவு அறிக்கையில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு திருத்தங்களை செய்துள்ளது. இதனை திமுக தலைவர் வன்மையாக கண்டித்து கடிதம் எழுதியதோடு நிற்காமல், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், கடந்த, பிப்ரவரி 6ம் தேதி, தலைநகர் தில்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

எந்த வகையில் தமிழ்நாடு தாழ்ந்து விட்டது. எல்லா வகையிலும் ஒன்றிய அரசுக்கு பொருள் ஈட்டும் தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வரிப் பகிர்வில் கூட 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு சார்பில் வழங்குகிறோம். அதில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திருப்பித் தருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

உத்தரப் பிரதேசம், பிகார், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்குகின்றனர். ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை?

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடிக்கிறார். தானும் ஒரு தமிழச்சி எனும் சொல்லும் அவர் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? கொடுக்கும் பணத்தை கூட திருப்பித் தருவதில்லை.

நிதி நெருக்கடியான நிலையிலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் 13 திட்டங்களில், நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழும் வகையில் செயல்படுகிறோம். 41 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். கல்வியில் வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். இதனை தமிழ்நாடு மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். இதனை திசை திருப்பும் வகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்தனர்.

அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது. மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதி

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிர்மலா சீதாராமன் கோபப்படுகிறார். இதற்கு மேலும் ஒன்றிய அரசு திருந்தாவிட்டால் திமுக உரிய வகையில் பாடம் புகட்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்த தேர்தல் அமைதியாகவும் நியாயமாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் விவகாரம், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன் வைத்து எதிர்கட்சியினர் பேசினர். அண்ணாமலை சவுக்கால் தன்னை அடித்துக் கொண்டார். இருப்பினும், 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளோம்.

இது தான் திமுக தலைவர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கிற்கான எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →