முகப்பு
தமிழ்நாடு

நாகை - இலங்கை இடையே பிப். 12 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் பிப். 12 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 9:14 AM
நாகை - காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து.
பகிர்:

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் பிப். 12 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 2023 அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை பல்வேறு காரணங்களால் சில நாள்களிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் இந்த கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

இடையில் அவ்வப்போது கப்பல் சேவையை நிறுத்துவதுமாகவும் பிறகு இயக்குவதுமாகவும் பின்பற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் கப்பல் சேவை மீண்டும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பழனி தைப்பூசம்: சிறப்பு ரயில் இயக்கம்

தற்போது இந்த பருவமழை முடிவடைந்த நிலையில் கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி இந்தியா-இலங்கை இடையேயான சிவகங்கை என்கிற பயணிகள் கப்பல் சேவை பிப். 12 முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →