செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் சீமான்.  
தமிழ்நாடு

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது, அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

எங்களுக்கு தேவையில்லை, அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

நான் மக்களுக்காக வந்திருக்கிறேன், அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன்.

விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவைதான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார்.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரைக்கும் இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லையே?. அதிமுக, திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி ஒரு வியூக வகுப்பாளர் தேவையா?. இதே பிரசாந்த் கிஷோர் பிகாரில் வியூக அமைத்து ஜெயிக்கவில்லையே?.

வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது!

காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள். பிகாரில் இருந்து வரும் ஒருத்தருக்கு அறிவு இருக்கிறது, தமிழ்நாட்டில் இருப்பவருக்கு இல்லையா. உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன்.

இந்த மண்ணில் பிறந்தவர்கள் இங்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி தெரியும்.

பிகாரில் இருந்து வந்தவருக்கு திருப்பரங்குன்றம், அத்திக்கடவு-அவிநாசி, நொய்யல் ஆறு போன்ற பிரச்னைகள் எப்படி தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காருடன் 300 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

காற்றில் கரியமில வாயு அளவு புதிய உச்சம்: ஐ.நா.

மடகாஸ்கரில் ராணுவ ஆட்சி

மேலும் 5 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்

நிலத்தை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் புகாா்

SCROLL FOR NEXT