மேட்டூர் அணை (கோப்புப்படம்). கோப்புப் படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி! 20 ஆண்டுகளுக்குப் பின்!!

மேட்டூர் அணையின் கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி 20 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கின.

DIN

சேலம்: மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடி ஆகும். அணையின் மேல்பகுதியில் 16 அடி அகல சாலை உள்ளது. அணை அடிப்பகுதியில் 4,400 அடி நீளம் கொண்ட கசிவு நீர் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில் 281 கசிவு நீர் துளைகள் உள்ளன. அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் அழுத்தத்தால், ஊடுருவும் நீர், கசிவு நீர் துளைகள் வழியே வெளியேறி சுரங்கத்திற்கு செல்லும், தொடர்ந்து சுரங்கத்தின் இரு பகுதிகளிலும் உள்ள சிறு கால்வாய் வழியாக வெளியேறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு துளைகளில் உள்ள சுண்ணாம்பு படிமங்கள் வெளியேற தொடங்கின. அதனால், வெளியேறும் நீரின் அளவு குறைந்தது.

எனவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு கழிவு நீர் துளைகளில் படிந்த சுண்ணாம்பு படிமங்களை அகற்ற நீர்வளத்துறை முடிவு செய்து தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 20 துளைகளில் படிவம் அகற்றப்பட்டுள்ளது. இப்பணி முடிக்க 6 மாத காலம் ஆகும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

SCROLL FOR NEXT