அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: உடல்நலக் குறைவால், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர்களில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராகவும், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் அதேவேளையில் அதிரடியாக பதிலடி கொடுப்பதில் மூத்தவரான அமைச்சர் துரைமுருகன் (86) காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவால், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையால் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துரைமுருகனை, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.