ப.சிதம்பரம்(கோப்புப்படம்)  
தமிழ்நாடு

மத்திய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு முடிவுகட்ட வேண்டும்: ப.சிதம்பரம்

தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து மத்திய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு முடிவுகட்ட வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

DIN

தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து மத்திய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு முடிவுகட்ட வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது,

அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது. மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில் அரசின் உண்மை. இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா?

இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா? நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்துக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

அவரது பேச்சுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT