உதயநிதி,  
தமிழ்நாடு

அண்ணா சாலைக்கு தனியே வரத் தயார்: அண்ணாமலை எதிர் சவால்!

உதயநிதிக்கு எதிர் சவால் விட்ட அண்ணாமலை.

DIN

அண்ணா சாலைக்கு தனியாக வரத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு எதிர் சவால் விடுத்துள்ளார்.

அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி சவால் விடுத்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறேன். அண்ணா சாலைக்கு நான் எங்கு, எப்போது வர வேண்டுமென்று திமுகவினர் கூறட்டும், அங்கு நான் வருகிறேன். அண்ணா சாலையில் எந்த இடம் என்று குறிப்பிட்டு சொன்னால் தனியாக வருகிறேன்.

இதையும் படிக்க: சுகாதார நிலையங்களில் மூத்த மருத்துவர்கள் 24*7 பணியில் இருக்க வேண்டும்! - மனித உரிமைகள் ஆணையம்

பாஜகவினர் யாரும் என்னுடன் வர மாட்டார்கள், நான் தனியாக வருகிறேன், திமுகவினர் அனைத்துப் படைகளையும் திரட்டி என்னைத் தடுத்து நிறுத்தட்டும்.” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “திமுக ஐடி விங்கிற்கு ஒரு நாள் அவகாசம் தருகிறோம், Get out modi என எவ்வளவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். நாளை(பிப். 21) காலை 6 மணிக்கு Get Out Stalin என்பதை பதிவிட இருக்கிறேன். இது எவ்வளவு டிரெண்டாகிறது என்பதைப் பார்ப்போம்.

தமிழகத்தில் செயல்படும் ஆங்கில வழி பள்ளிகளிலேயே தமிழ் கற்பிப்பது இல்லை. கல்விக்கு கொடுக்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT