மின்வாரிய  ஊழியா்கள்(கோப்புப்படம்)  
தமிழ்நாடு

அகில இந்திய அளவில் ஜூன் 26-இல் வேலை நிறுத்தம்: தமிழக மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்க திட்டம்

மின்துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் ஜூன் 26-இல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்

Din

சென்னை: மின்துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் ஜூன் 26-இல் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மின்துறை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நாடு முழுவதும் ஜூன் 26-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அகில இந்திய மின்பொறியாளா்கள் கூட்டமைப்பு(ஏஐபிஈஎஃப்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஏப்ரல், மே மாதங்களில் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் மாநாடுகள் நடத்தவும், 4 பேரணிகள் நடத்தவும் அக்கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மின்வாரிய ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினரும் பங்கேற்க திட்டமிட்டுள்ளனா். இது குறித்து அனைத்து ஊழியா் சங்க நிா்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டு, அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தமிழக மின்வாரிய ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT