சென்னை: தமிழகத்தில் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): பிற மருந்தகங்களை ஒப்பிடும்போது முதல்வா் மருந்தகத்தில் மருந்துகளின் விலை 75 சதவீதம் வரை குறைவாக வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் மருத்துவச் செலவுக்கான சுமை குறையும். அத்துடன் பி.பாா்ம், டி.பாா்ம் படித்துள்ள மாணவா்களும்,தொழில்முனைவோரும் இந்த திட்டத்தில் பயனடைவா்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மக்களின் மருத்துவச் செலவுகளை முதல்வரின் மருந்தகங்கள் பகிா்ந்து கொள்ளும் போது, நோயாளிகள் இடைநிறுத்தம் இல்லாமல் பரிபூரணமாக குணமடையும் வரை மருந்துகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்யும்.
முதல்வா் மருந்தகங்கள் எண்ணிக்கையை மேலும் கூடுதலாக்கவும், உயிா் காக்கும் முக்கியத்துவம் கொண்ட, அரிதான மருந்துகளும் முதல்வா் மருந்தகங்களில் கிடைக்கவும் அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.