ரயில் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

எழும்பூர், பெரம்பூர் நிலையங்களில் நிற்காமல் செல்லும் ரயில்கள்! பயணிகள் கவனிக்க..

எழும்பூர், பெரம்பூர் நிலையத்தில் ரயில்கள் நிற்காது! ஏன்?

DIN

அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஹைதராபாத், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும், வழக்கமாக நின்று செல்லும் செகந்திராபாத் மற்றும் பாட்னா ரயில்களும் சென்னை எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது.

அதற்குப் பதிலாக, இந்த ரயில்கள் செங்கல்பட்டு அல்லது திருத்தணியில் நிறுத்தப்படவுள்ளன. சென்னையிலிருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் புவனேஸ்வர் செல்லும் அகர்தலா - எஸ்எம்விடி பெங்களூரு ஹம் சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12504), பெரம்பூரில் நிறுக்காமல் கூடூர் மற்றும் ரேணிகுண்டா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் திருத்தணி இரண்டு இடங்களும் சென்னையின் முக்கிய பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 65 முதல் 80 கி.மீ. தொலைவில் உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

திருத்தணியில் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டதால், பிப்.22 மற்றும் பிப்.25 ஆகிய தேதிகளில் கிட்டத்தட்ட 1,500 பயணிகள், பெரம்பூர் செல்வதற்காக அதிக நெரிசல் கொண்ட உள்ளூர் ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.

திருத்தணியிலிருந்து பெரம்பூருக்கு நேரடியாக இயக்கப்படும் ஈமு ரயில்கள், காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பெரம்பூருக்குச் செல்ல இரண்டு மணிநேரத்துக்கும் மேல் ஆவதால் பயணிகள் மேலும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அவசரத்தில் பயணிப்பவர்களுக்கு, ரயில் நிலையத்தை அடைவதற்கு வாடகை டாக்ஸி எடுப்பது ஒரே வழியாக இருக்கிறது. டாக்ஸிகளில் செல்வதற்கு ரூ.1800 வரை வசூலிப்பதாகவும், பயணிகளின் தேவையைப் பயன்படுத்தி ஓட்டுநர்கள் கூடுதலாக ரூ.500 வசூலிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எழும்பூர், பெரம்பூர் நிலையங்களில் நின்று செல்லாத ரயில்கள் விவரம்

  • டாடாநகர் - எர்ணாகுளம் விரைவு ரயில் (18189)

  • அகர்தலா - எஸ்எம்விடி பெங்களூரு ஹம்சஃபர் விரைவு ரயில்(12504)

  • செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695)

  • திப்ரூகார்-மைசூரு பாக்மதி விரைவு ரயில் (12577)

  • பாட்னா - எஸ்எம்விடி பெங்களூரு ஹம்சஃபர் விரைவு ரயில் (22353)

  • ஜசிதி - எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில் (22306)

  • புரூலியா - திருநெல்வேலி விரைவு ரயில் (22605)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT