ஜெ.பி. நட்டாவுடன் தமிழிசை செளந்தரராஜன் சந்திப்பு  
தமிழ்நாடு

ஜெ.பி. நட்டாவுடன் தமிழிசை செளந்தரராஜன் சந்திப்பு!

நட்டாவுடன் தமிழிசை செளந்தரராஜன் சந்திப்பு தொடர்பாக...

DIN

தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா்களைத் தோ்ந்தெடுக்கும் பணி தில்லியில் நடைபெற்று வருகிறது. அந்தமான் நிகோபா் தீவின் யூனியன் பிரதேச தலைவரை தோ்ந்தெடுக்கும் பொறுப்பாளராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்தமான் நிகோபா் தீவின் பாஜக தலைவரை இறுதி செய்வதற்காக நட்டாவை இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழிசை தெரிவித்ததாவது:

“கட்சியின் நிர்வாகியாக நட்டாவை சந்திக்க வந்துள்ளேன். இது வழக்கமாக கூட்டம்தான். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து விவாதித்தோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆலோசித்தோம். அரசுக்கு எதிரான அதிருப்தியை அவரிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து மாணவியை வெளி நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT