அன்புமணி - ராமதாஸ் 
தமிழ்நாடு

முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர்: ராமதாஸ் திட்டவட்டம்

முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.

DIN

சென்னை: பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் மாற்றமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரவித்துள்ளார்.

முகுந்தன் நியமனத்தில், பாமக பொதுக்குழுவில், ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என்பதை அக்கட்சியின் பொதுக்குழுவிலேயே அறிவித்துவிட்டேன். முகுந்தன் நியமனத்தில் மாற்றமில்லை. அன்புமணியுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அது பேசி சரிசெய்யப்பட்டுவிட்டது. பொதுக் குழுவில் நடந்தது உள்கட்சி விவகாரம் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், இளைஞரணித் தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பசுகையில், பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் பரசுராமன் முகுந்தனை நியமிப்பது தொடர்பாக கூட்ட மேடையில் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு உதவியாக யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்தார். இதைக் கேட்டதும், மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டார் அன்புமணி. இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இளைஞரணித் தலைவர் நியமனத்துக்கு நன்றி தெரிவிக்குமாறு ராமதாஸ் கூறியதும் கெளரவத் தலைவர். ஜி.கே. மணி மைக்கை எடுத்தார்.

அப்போது அவரிடம் மைக்கை கேட்டு வாங்கிய அன்புமணி பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. இனி தொண்டர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். இது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மீண்டும் சொல்கிறேன். நான் உருவாக்கியதுதான் வன்னியர் சங்கம், கட்சி. இங்கு நான்தான் முடிவு எடுப்பேன். நான் சொல்வதை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் அது யாராக இருந்தாலும் கட்சியில் இருக்க முடியாது, விலகிக்கொள்ளலாம் என மேடையில் அன்புமணியை கடுமையாக எச்சரித்தார் ராமதாஸ்.

இதனால், பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தன்தான் என்று ராமதாஸ் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

நித்ய கன்னி... மனு பாக்கர்!

SCROLL FOR NEXT