நியாய விலைக் கடை(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

DIN

கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.

முதல்வரின் அறிவுரைப்படி, ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தொடங்கியது டோக்கன் விநியோகம்

அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும். ஏனைய பகுதிகளில் 5 கிலோ

வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

இதுவரை 7 இலட்சத்து 23 ஆயிரத்து 482 மெ.டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT