தமிழ்நாடு

பொங்கல் திருநாள்: சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கெங்கு?

பொங்கல் திருநாளையொட்டி, சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

DIN

பொங்கல் திருநாளையொட்டி, சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13 ஆம் தேதியில் சிறப்பு ரயில் (எண்: 06093) இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

சென்னை தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஜனவரி 11,13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06103) இயக்கப்படும். தாம்பரத்தில் முதல்நாள் மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.

சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13,20,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06091) இயக்கப்படும். தாம்பரத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோயிலுக்கு ஜனவரி 12,19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06089) இயக்கப்படும். சென்ட்ரலிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிளாக் நூடுல்ஸ்... ரித்திகா சிங்!

தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்திருக்கிறேன் - உண்மையை உடைத்த அகிலேஷ் யாதவ்

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

SCROLL FOR NEXT